கிழக்கிலங்கையில் முதன்முறையாக விழிப்புணர்வு உதைப்பந்தாட்ட போட்டி...........

 கிழக்கிலங்கையில் முதன்முறையாக விழிப்புணர்வு உதைப்பந்தாட்ட போட்டி...........

கிழக்கிலங்கையில் முதன் முறையாக போதையற்ற நாடும் செளபாக்கியமான தேசம் எனும் தொனிப்பொருளில் சிறுவர்களுடாக விழிப்புணர்வு உதைப்பந்தாட்ட போட்டிகள் திராய்மடு விளையாட்டு மைதானத்தில் யூபா (YouPah) சிறுவர் கழகத்தின் இயக்குணர் ப.தினேஸ் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரன் கலந்து சிறப்பித்தார்.
சிறுவர்களூடாக சமூகத்தை விழிப் பூட்டும் நோக்கில் இவ் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இப் போட்டியில் 11 விளையாட்டு அணியினர் கலந்து கொண்டு திறமைகளை வெளிக்காட்டினர்.
இதன் போது சான்றிதழ்களும் வெற்றி கிண்ணங்களும் அதிதிகளினால் சிறார்களுக்கு வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு உத்தியோகத்தர் ரி.மதிராஜ், நரம்பியல் விஞ்ஞானி எம்.கீதாஞ்சன், சீற்ஶ்ரீலங்கா நிறுவன பணிப்பாளர் ச ஜே.ரூசாந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.









Comments