ஆரையம்பதியில் பட்டத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது....................

 ஆரையம்பதியில் பட்டத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது....................

மட்டக்களப்பு ஆரையம்பதி கடற்கரையில் ஆரையூர் விளையாட்டுக் கழகத்தின் பட்டத் திருவிழா  சிறப்பாக நடைபெற்றது.
பட்டத் திருவிழாவில் 30க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றினர். ஆரையம்பதி மகா வித்யாலயத்தில் பத்தாம் ஆண்டில் கல்வி கற்கும் ஆரையம்பதியைச் சேர்ந்த ரவீந்திரன் சோபிதன் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
முதல் மூன்று இடங்களையும் பெற்று போட்டியாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசில்கள் வழங்கப்பட்டன, ஆரையம்பதி ஆரையூர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆரையம்பதி கந்த சுவாமி ஆலயத்தின் பிரதம குரு உமாபத சர்மா, கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட விளையாட்டு உத்தியோகத்தர் வேலுப்பிள்ளை ஈஸ்வரன் உட்பட பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.









Comments