முதல் தடவையாக சமுர்த்தி முகாமையாளர்களை சந்தித்த மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்.....
மட்டக்களப்பு மாவட்ட புதிய சமுர்த்தி பணிப்பாளராக பதவியேற்ற S.ராஜ்பாபு முதல் தடவையாக 14 பிரதேச செயலகங்களுக்கும் உட்பட்ட சமுர்த்தி தலைமையக முகாமையாளர்கள், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்கள், கருத்திட்ட முகாமையாளர்கள் மற்றும் வங்கி முகாமையாளர்களை சந்தித்தார்.
மாவட்ட செயலகத்தில் 16 அன்று பணிப்பாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில், கடந்த காலத்தில் நடைபெற்ற வங்கி முன்னேற்றம், சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், வாழ்வாதார முன்னேற்றங்கள் புதிய கருத்திட்டங்கள் போன்றவை பற்றி கலந்துரையாடப்பட்டது.
மற்றும் கணக்காய்வு, சமூக பாதுகாப்பு நிதிவிடயம் ,தாபன விடயம் தொடர்பான முன்னேற்றம் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட செயலக கணக்காளரும் சமுர்த்தி பிரிவின் கணக்காளருமான MS.பஷீர் அவர்களும் மாவட்ட செயலக சமுர்த்தி சிரேஷ்ட முகாமையாளர்கள் விடய முகாமையாளர்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment