மட்டக்களப்பு - வவுணதீவில் வாழ்வாதார உதவியாக ஆடுகள் வழங்கி வைப்பு...........

 மட்டக்களப்பு - வவுணதீவில் வாழ்வாதார உதவியாக ஆடுகள் வழங்கி வைப்பு...........

Action unity lanka நிறுவனத்தின் Gift of love and hope எனும் செயற்திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பிற்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு (26) திகதி வவுணதீவில் இடம்பெற்றது.
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சுய தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய செயற்திட்டமாக ஒரு குடும்பத்திற்கு 75000/= பெறுமதியான, 21 குடும்பம்களுக்கும் 1,578,000 ரூபா பெறுமதியான ஆடுகள் இதன் போது கையளிக்கப்பட்டன.
இதன் போது வவுணதீவு பிரதேச செயலக பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 21 குடும்பங்களுக்கு, ஒரு குடும்பத்திற்கு தலா மூன்று ஆடுகள் வீதம் மொத்தம் 63 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு Action unity lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே.கஜேந்திரன், பிரதேச செயலகம் மற்றும் Action unity lanka நிறுவனம் என்பவற்றின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Comments