சித்திரை வருடத்தை முன்னிட்டு பாரம்பரிய உணவு விற்பனைக் கண்காட்சி........
மட்டக்களப்பு மாவட்ட செயலகமும், கலாசார திணைக்களமும் இணைந்து சித்திரை வருடத்தை முன்னிட்டு நடாத்திய பாரம்பரிய உணவு விற்பனைக் கண்காட்சி நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் (08) அன்று இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் கலாசார திணைக்களத்தின் தொலஸ் மக பஹன செயற்திட்டத்தின் கீழ் உள்ளூர் உற்பத்தியாளரின் உற்பத்திகளை விற்பனை செய்வதற்கான களமாக இவ் விற்பனை கண்காட்சி நடைபெற்றது.
இதில் பலர் ஆர்வமாக கலந்து கொண்டு நஞ்சற்ற உணவு பொருட்களை கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந், உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment