மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட வீதியோர வியாபாரத்தை தடை செய்வதற்கான கலந்துரையாடல்.............
மட்டக்களப்பு மாநகர சபையின் வீதியோர வியாபாரத்தை தடை செய்வதற்கான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் (04)ம் திகதி இடம் பெற்றது.
மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட சில பகுதிகளின் வீதியோர வியாபாரத்தை தடை செய்வதற்கான கலந்துரையாடல் உயர் அதிகாரிகளுடன் இடம் பெற்றது.
வீதியோர வியாபாரத்தினால் சூழல் மாசுபடுதல், வீதி விபத்து, போக்குவரத்திற்கு தடங்கள் ஏற்படுத்தல், மாநகர பொதுச்சந்தையில் வியாபாரம் குறைந்தமை போன்ற செயற்பாடுகளுக்கான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றமையினை கருத்தில் கொண்டு இக்கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளது.
வீதியோர வியாபாரத்தில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், சில மாற்று நடவடிக்கைகளும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந், 243 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சந்திம குமாரசிங்க, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் மாநகரசபையின் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment