மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தின் புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது........
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தின் புதிய அலுவலகம், மட்டக்களப்பு - அம்பாறை மறைமாவட்ட அருட்திரு பேராயர் ஜோசெப் பொன்னையா அவர்களினால் 31 அன்று திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நலன்கருதி பல்வேறுவிதமான பணிகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில் வசதிகளுடன் கூடிய அலுவலகம் ஒன்றின் அவசியம் கருதி சிவில் சமூகத்தின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா அவர்களினால் பேராயரிடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கிணங்க மட்டக்களப்பு நகரின் மத்திய வீதியில் அமைந்துள்ள கத்தோலிக்க கழக கட்டடத்தின் ஒருபகுதி சிவில் சமூகத்தின் அலுவலக நடவடிக்கைகளுக்காக பேராயரினால் சிவில் சமூகத்திற்கு வழங்கப்பட்டதோடு 2024 ஈஸ்ட்டர் தினத்தன்று பேராயரினாலே அலுவலகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
Comments
Post a Comment