மாவடியோடை ஆற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.............
மட்டக்களப்பு மாவடியோடை ஆற்றில் மூழ்கி, இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
பண்ணையொன்றில் தங்கியிருந்துவேலை செய்யும், ஏறாவூர்ப் பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே உயிரிழந்தாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பண்ணைக்கு அருகேயுள்ள ஆற்றுக்கு குளிக்கச் சென்றபோதே இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டபோது, திடீர் மரண விசாரணைகளை, மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் முன்னெடுத்தார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தகது.
Comments
Post a Comment