மட்டுவில் இரண்டாவது நாளாக நடைபெற்ற சமுர்த்தி அபிமானி சந்தை................

 மட்டுவில் இரண்டாவது நாளாக நடைபெற்ற சமுர்த்தி அபிமானி சந்தை................

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக வருடாந்தம் நடாத்தப்படும் சமுர்த்தி அபிமான சந்தை கடந்த 08ம் தொடக்கம் நாடுபூராவும் நடைபெற்று வருகின்றது.

 இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களிலும் சமுர்த்தி அபிமானி சந்தை நடைபெற்று வருகின்றது. 09ம் திகதி அன்று வெல்லாவெனி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் சு.ராஜ்பாபு அவர்கள் கலந்து கொண்டு சமுர்த்தி அபிமானி சந்தையை தொடக்கி வைத்தார்.

 இதன் போது சமுர்த்தி பயனுகரிகளின் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், விற்பனை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு செயலகத்தின் சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும், வெல்லாவெளி சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எஸ்.ஜெயராஜ் அவர்களும், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் அ.குககுமரன் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மற்றுமொரு நிகழ்வானது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்றது. இதன் போது சமுர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதாரா திட்டங்களுக்கான கடன்கள் வழங்கப்பட்டதுடன், பயனாளிகளின் உற்பத்திகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

 இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். 

சமுர்த்தி அபிமானி உற்பத்தி சந்தை எதிர்வரும் 12ம் திகதி வரை நடைபெறும். 





Comments