இரத்தினபுரி மொனரவிலவில் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானம்........
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு கிரிக்கெட் மைதானம் நேற்று (02)ம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
இரத்தினபுரி மாவட்டத்தில் மொனரவில பிரதேசத்தில் இவ்சர்வதேச மட்டத்திலான கிரிக்கெட் மைதானம் நேற்று (02)ம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
பார்வையாளர் அரங்கு, ஏழு புற்தரை விக்கெட்டுகளைக் கொண்டுள்ள இம்மைதானத்தில், முதல்தர போட்டிகள், 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகள், சுற்றுலா கிரிக்கெட் அணிகளுக்கான பயிற்சி போட்டிகள் மற்றும் சர்வதேச பெண்கள் கிரிக்கெட் போட்டிகள் ஆகியவை நடாத்தக் கூடியதாகவுள்ளது.
இம் மைதானத்தில் பயிற்சிகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகளுக்காக அப்பகுதியில் உள்ள பாடசாலைகள் மற்றும் கிரிக்கெட் கழகங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்வில் அமைச்சர் பவித்ரா வணிஆராச்சி, இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா, சப்ரகமுவ மாகாண சபைத் தலைவர் காஞ்சன ஜயரத்ன, முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் சனத் ஜயசூரிய, கிரிக்கெட் வீரர் வனிது ஹசரங்க, பிரதன் நிஷ்ஷங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment