பாசிக்குடா கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்..............
மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் மூழ்கி குடும்பஸ்தரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பைச் சேர்ந்த 39 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் என அடையாளங் காணப்பட்டுள்ளது. (29) மாலை இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ள நிலையில், (30) காலையே சடலம் மீட்கப்பட்டது.
பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி ச.ராஜ்குமார் மரண விசாரணையைகளை முன்னெடுத்திருந்தார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Comments
Post a Comment