ஏறாவூரில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகம்.................

 ஏறாவூரில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகம்.................

அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக இலவச அரிசி பொதிகள் வழங்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு (22) ஏறாவூர் கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் வழிகாட்டுதலில் ஏறாவூர் பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், மாவட்டத்திற்கான 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவின் 6 D பகுதியில் உள்ள குறைந்த வருமானம் பெறுகின்ற தெரிவு செய்யப்பட்ட 245 குடும்பங்களில் 100 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக இவ்வரிசிப் பொதிகள் வழங்கப்பட்டன.
அத்துடன், பிரதேசத்தில் அமைந்துள்ள இரு பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டப் அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அத்தாவுல்லா, மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேசப் பாடசாலைகளின் அதிபர்கள், பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



Comments