மட்டக்களப்பில் களைகட்டிய சமுர்த்தி சித்திரை புதுவருட பாரம்பரிய விளையாட்டு விழா......
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் வருடந்தோறும் நடாத்தும், சித்திரை புதுவருட பாரம்பரிய விளையாட்டு விழா இவ்வருடமும் 21ம் திகதி நாடுபூராவும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் சகல சமுர்த்தி வங்கிகளின் ஊடாக 2024ம் ஆண்டிற்கான சித்திரை புதுவருட விளையாட்டு விழா இவ்வருடமும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கோப்பாவெளி சமுர்த்தி வங்கியில் நடைபெற்ற சித்திரை புதுவருட விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.ராஜ்பாபு அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
இதே போன்று பல்வேறு வங்கிகளிலும் பிரதேசெயலாளர்கள், சமுர்த்தி தலைமைய முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி பணிப்பாளர்கள் தலைமையில் சித்திரை புதுவருட விளையாட்டு விழாக்கள் நடைபெற்றன.
இதன் போது பாரம்பரிய விளையாட்டுக்களான கயிறு இழுத்தல், கிடுகு பின்னல், முட்டி உடைத்தல், தலையணைசமர், மிட்டாய் பொறுக்குதல் மற்றும் இன்னும் பல போட்டிகள் நடைபெற்றன. இதில் சமுர்த்தி பயன்பெறும் குடும்பங்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் கலந்த கொண்ட பரிசில்களை பெற்றுக் கொண்டனர்.
Comments
Post a Comment