புனரமைக்கப்பட்ட இந்து கல்லூரியின் கூடைப்பந்தாட்ட மைதானம்............
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் கூடைப்பந்தாட்ட மைதானத்தினை புனரமைத்து தருமாறு இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க கனடா நாட்டுக் கிளையின் பிரதிநிதி சசி செல்வநாயகம் அவர்களின் முயற்சியால் மேற்படி கூடைப்பந்தாட்ட மைதானமானது புனரமைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக 2024.04.01 திறந்து வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரி அணியினருக்கும், மட்/ இந்துக்கல்லூரி அணியினருக்கும் இடையிலான சினேகபூர்வ கூடைப்பந்தாட்ட போட்டியும் இதன் போது இடம்பெற்றது.
கல்லூரியின் அதிபர் க.பகீரதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க கனடா கிளையின் நிர்வாக உறுப்பினர் க.கேதீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், விசேட அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிமனையின் உதவிக்கல்வி பணிப்பாளர் (உடற்கல்வி) வி.லவக்குமார் மற்றும் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் எம்.சதீஷ்குமார், செயலாளர் இரா.சிவநாதன் உள்ளிட்ட பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
Comments
Post a Comment