கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடம் பகுதியில் விபத்து..............
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடம் பகுதியில் இன்று (02) அதிகாலை 3.30 மணியளவில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது, இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில் சுற்றுலாப்பிரயாணிகளை ஏற்றும் கெப் ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் போது இவ் வாகனத்தின் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர், சாரதியின் நித்திரை கண்கலக்கமே இச் சம்பவத்துக்கு காரணமாகலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
வேககட்டுப்பாட்டை இழந்த வாகனம், மின்கம்பத்தில் மோதியதுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment