மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடமாடும் சேவையொன்று புதுநகரில் இடம் பெற்றது.............

 மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடமாடும் சேவையொன்று புதுநகரில் இடம் பெற்றது.............

பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் அவர்களின தலைமையில் இடம்பெற்ற நடமாடும் சேவையில் அசுவெஸ்ம, பிறப்பு, இறப்பு பதிவு, தேசிய அடையாள அட்டை புகைப்படம் எடுத்தல், ஆயுள்வேத வைத்திய சிகிச்சை, சமூக பராமரிப்பு நிலையத்தினால் வழங்கப்படுகின்ற சேவைகள் அத்துடன் இணைந்த Family Plan Association நிறுவனத்தினால் பெண் நோயியல் தொடர்பான சேவையும் வழங்கப்பட்டது.
குறித்த நடமாடும் சேவை உதவி பிரதேச செயலாளர், கிராம நிருவாக உத்தியோகத்தர், சுகாதார வைத்திய அதிகாரி, ஆயுள்வேத வைத்திய அதிகாரி மற்றும் ஏனைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் திருப்பெருந்துறை, திமிலைதீவு, சேத்துக்குடா, வீச்சுகல்முனை, ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்திருந்தனர்.




Comments