மட்டக்களப்பில் சுகாதார அமைச்சின் புதிய உடற்பயிற்சி நிலையம் திறந்து வைப்பு..............

 மட்டக்களப்பில் சுகாதார அமைச்சின் புதிய உடற்பயிற்சி நிலையம் திறந்து வைப்பு..............

மட்டக்களப்பில் சுகாதார அமைச்சினால் தொற்றாநோயிலிருந்து பொதுமக்களை காப்பாற்றும் பொருட்டு புதிய உடற்பயிற்சி நிலையம் அன்மையில் திறந்து வைக்கப்பட்டது. 

கோட்டை பூங்கா வளாகத்தில் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ், 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி நிலையம் பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

நிகழ்வானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் இடம் பெற்றதுடன் அதிதிகளாக, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எந்திரி என்.சிவலிங்கம், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் தொற்றா நோய் பிரிவின் வைத்திய அதிகாரி எஸ்.உதயகுமார், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் நவலோஜிதன், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை அலுவலக முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் சுகுணன்இ அதிகாரிகள்இ பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டார்.

Comments