வாழைச்சேனையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு.............

 வாழைச்சேனையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு.............

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிண்ணையடி பகுதியை சேர்ந்த ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்காக மின்கம்பியை நீர் இறைக்கும் இயந்திரத்துடன் பொருத்த முயற்சித்த போது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Comments