'கைபேசியில் மூழ்கி தலை குனியாமல் சமுதாயத்தை அண்ணாந்து பார்க்க வாருங்கள்'...............
மட்டக்களப்பில் முதல் தடவையாக பட்டம் விடும் திருவிழாவை மட்டக்களப்பு, ஆரையம்பதியில் ஆரையூர் விளையாட்டு கழகம் நடாத்தவுள்ளது.
சித்திரை புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக சித்திரை மாதம் 20ம் திகதி மாலை 3.30 மணிக்கு ஆரையம்பதி கடற்கரைக்கு அழைக்கின்றார் ஆரையூர் விளையாட்டு கழகம். அவர்களின் தொனிப்பொருள் உண்மையில் சிறந்ததே 'கைபேசியில் மூழ்கி தலை குனியாமல் சமுதாயத்தை அண்ணாந்து பார்க்க வாருங்கள்' என அழைக்கின்றார்கள்.
இப்பொழுதே தொடங்கி விட்டார்கள் மட்டக்களப்பு பட்டம் கட்டுவோரும், பட்டம் விடுவோரும். களை கட்டத் தொடங்கி விட்டது ஆரையூர் பட்டம் விடும் திருவிழா.
Comments
Post a Comment