இலங்கை சமூகப் பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத் திட்டத்திற்கான மெச்சுரை வழங்கும் நிகழ்வு..............

 இலங்கை சமூகப் பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத் திட்டத்திற்கான மெச்சுரை வழங்கும் நிகழ்வு..............

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் இலங்கை சமூகப் பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத் திட்டத்தில் அதிகமான பயனாளிகளை இணைப்புச் செய்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களை சிறந்த முறையில் வழிப்படுத்திய காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் மெச்சுரை வழங்கும் நிகழ்வு (16)ம் திகதி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.எம்.முஹமட் றபீக், எம்.வீ.சித்தி வசீறா, எம்.ஐ.சாஹிரா ஜஸ்மின், எஸ்.எம்.சபீனா உவைஸ் ஆகிய உத்தியோகத்தர்களுக்கு மெச்சுரை வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக கிராம உத்தியோகத்தர் மற்றும் சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட இணைப்பதிகாரி, கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விடய உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Comments