AU Lanka நிறுவனத்தினால் கிரான் மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு..............

 AU Lanka நிறுவனத்தினால் கிரான் மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு..............

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிரான் பகுதி மக்களுக்கான உலர் பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு (04) திகதி இடம்பெற்றுள்ளது.
ஆக்ஷன் யூனிட்டி லங்கா (AU Lanka) நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கே.கஜேந்திரன் தலைமையில் கிரான் பிரதேச செயலாளர் கா.சித்திரவேல் அவர்களின் ஏற்பாட்டில் கிரான் பிரதேச செயலகத்தில் குறித்த நிகழ்வு இடம் பெற்றுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட சுமார் 200 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அக்ஷன் யூனிட்ரி லங்கா (AU Lanka) நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது உலர் உணவு பொதிகளை பெற்றுக்கொண்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் அக்ஷன் யூனிட்ரி லங்கா நிறுவனத்திற்கு தமது நன்றிகளை தெரிவித்ததுடன், குறித்து உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைப்பதற்கான நிதி உதவியிணை சிறுவர் நிதியம் (ChildFund) அனுசரணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments