புனித காணிக்கை அன்னை ஆலய 400 வது ஆண்டை சிறப்பிக்கும் முகமாக மென்பந்து கிரிக்கெட் போட்டி....
மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை அன்னை ஆலயத்தின் 400வது ஆண்டை முன்னிட்டு தாண்டவன்வெளி புனித காணிக்கை அன்னை ஆலயத்தின் இயங்கும் கிறிஸ்தவ வாழ்வு சமூக (CLC) உறுப்பினர்கள் நடாத்தும், மட்டக்களப்பு மறை மாவட்ட பங்குகளுக்கு இடையிலான 08 பேர், 05 ஓவர்கள் கொண்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பங்குத்தந்தை ஜூலியன் அவர்களின் தலைமையில் இன்று 06 காலை சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப்போட்டிகள் தற்போது மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, இறுதிப் போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும்.
Comments
Post a Comment