மட்டக்களப்பு மாவட்ட மாண்புறு மகளீர் கௌரவிப்பு நிகழ்வு-2024
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் "அவளுடைய பலம் நாட்டுக்கு முன்னேற்றம்" எனும் கருப்பொருளில் மாண்புறு மகளிர் கௌரவிப்பு நிகழ்வொன்று தேவநாயகம் மண்டபத்தில் நடை பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா யுலேக்கா முரளீதரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுக்கு முதன்மை அதிதிகளாக முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கலாமதி பத்மராஜா, கிளிநொச்சி முன்னாள் மாவட்ட செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மேலதிக மாவட்ட செயலாளர் எஸ். ஸ்ரீகாந்த், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ( காணி ) என்.முகுந்தன், நிதி நிறுவன இலங்கைக்கான பணிப்பாளர் தேவசிகாமணி மயூரன் மற்றும் இளைஞர் அபிவிருத்தி (அகம்) இணைப்பாளர் திலீப்குமார் , மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் V.வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் வரவேற்பு நடனம், வரவேற்புரை, தலைமையுரை நிறைவடைந்த பின்னர் பெண் தலைமை அரச சேவையாளர்கள், பெண்தொழில் முயற்சியாளர்கள் மற்றும் சுயதொழில் வழங்குநர்கள் ஆகியோர்களுக்கு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
Comments
Post a Comment