புனித மிக்கல் கல்லூரி 1975 மாணவர்களால் பாலர் பாடசாலைக்கு உதவி......
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் 1975ம் ஆண்டு க.பொ.த சாதாரணதரத்தில் கல்வி கற்ற மாணவர்களால், 2024ம் ஆண்டுக்கான புதிய செயற்திட்டத்திற்கு அமைவாக, ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆயித்தியமலை பாலர் பாடசாலைக்கு பல உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வுதவிகளை இங்கிலாந்தில் வசிக்கும் எமது நண்பர் வீரா அவர்களும், சுவிட்சலாந்து நாட்டில் வசிக்கும் ரெக்ஸ் அவர்களும் வழங்கி இருந்தனர்.
இந்நிகழ்வில் 1975ம் ஆண்டில் புனித மிக்கல் கல்லூரியில் க.பொ.த சாதாரணதரத்தில் கல்வி கற்ற அருட்தந்தை C.அன்னதாஸ் அடிகளார் மற்றும் சக நண்பர்கள் என்பவர்களுடன் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment