மட்டக்களப்பில் 145 மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.............

 மட்டக்களப்பில் 145 மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.............

கிழக்கு மாகாண கட்டளை தளபதியின் வழிகாட்டலில் கடந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதிலும் கல்வி மற்றும் சமூகப் பொருளாதார ரீதியில் அவர்களின் வாழ்க்கை தரத்தை மேலும் கட்டியெழுப்புவதற்கான பல்வேறு மனிதாபிமானப் பணிகள் தொடர்த்தும் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக மட்டக்களப்பு கல்குடா வலயக்கல்வி அலுவலத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட எட்டு (08) பாடசாலைகளை சேர்ந்த 145 வறிய மாணவர்களுக்கு தனவந்தர்களின் உதவியுடன் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியிலான இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  232 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் RPS.பிரசாத் அவர்களின் ஏற்பாட்டில் கிரான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இராணுவத்தின் 23வது காலா படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் MANP.பிரேமரத்ன கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் கிரான் பிரதேச செயலாளர் மு.சித்திரவேல், வாழைச்சேனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ALM.ஜெமீல், வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி லசந்த பண்டார உள்ளிட்ட பாதுகாப்பு படைப்பிரிவுகளின் இராணுவ உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது பாடசாலை மாணவர்களது கலை, கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


Comments