அமெரிக்கன் iHub நிறுவனத்தில் மகளிர் தின நிகழ்வு............
மட்டக்களப்பு - கல்லடியில் உள்ள அமெரிக்கன் iHub நிறுவனத்தினால் பெண்களின் வரலாற்று சாதனை மாதத்தினை சிறப்பிக்கும் வகையிலான நிகழ்வுகள் அமெரிக்கன் iHub இணைப்பாளர் என்.சுஜிர்தன் தலைமையில் நிறுவன வளாகத்தில் (16)ம் திகதி இடம் பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளார்.
அவள் கதையை வெளிக்காட்டும் களம் (Her Story Showcase) எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இடம் பெற்றது. மாவட்டத்தில் சாதனை படைத்த பெண்களின் திறமைகளை வெளிக்காட்டும் ஒரு களமாக இதன் போது கண்காட்சி நிகழ்வும் இடம்பெற்றதுடன் பலர் தமது உருவாக்கங்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.
இந் நிகழ்வில் பல்துறையில் தனது திறமைகளை வெளிக்காட்டும் புனித சிசிலியா தேசிய பாடசாலை மாணவி ரவிக்குமார் ஷயனாவினால் எழுதப்பட்ட கனைன் ஜேனி நூலின் முதல் பிரதியினை அரசாங்க அதிபரிடம் கையளித்து வெளியிட்டதுடன் மாணவியினால் வரையப்பட்ட ஓவியங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
மேலும் மாவட்டத்தில் முதலாவது பொப்பிசை பாடகியான சஜானியினால் பாடல் இதன் போது இசைக்கப்பட்டதுடன் மேலும் மகளிர் பெருமைகளை எடுத்தியம்பும் கருத்துக்களை அதிதிகள் வழங்கியதுடன் பங்கு பற்றிய சாதனையாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
Comments
Post a Comment