விளாவெட்டுவான் பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்படவுள்ள கொங்கிரீட் வீதிகளுக்கான ஆரம்ப நிகழ்வு ..............

விளாவெட்டுவான் பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்படவுள்ள கொங்கிரீட் வீதிகளுக்கான ஆரம்ப நிகழ்வு ..............

மட்டக்களப்பு விளாவெட்டுவான் கிராமத்தில் சுமார் 8.5 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்படவுள்ள கொங்கிரீட் விதிகளை செப்பனிடும் ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக வர்த்தக இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான சதாசிவம் வியாழேந்திரன் கலந்து கொண்டு செப்பனிடும் பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளத்திற்கு செப்பனிடப்படவுள்ள வீதிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கிராம மக்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்நிகழ்வுகளில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தில் பொறியியலாளர், கிராம அபிவிருத்திச் சங்க தலைவர், ஆலய குருமார், விளையாட்டு கழக உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





Comments