கிழக்கு மாகாண பிரதி பதிவாளர் நாயகத்திற்கு பிரியா விடை..............

 கிழக்கு மாகாண பிரதி பதிவாளர் நாயகத்திற்கு பிரியா விடை..............

கிழக்கு மாகாண பிரதி பதிவாளர் நாயகம் கே.திருவருள் அவர்களுக்கு பதிவாளர் பிரிவு உத்தியோகத்தர்களினால் பிரியாவிடை நிகழ்வு மாவட்ட செயலகத்தில் (22) திகதி இடம் பெற்றது.
33 வருடங்கள் அரச சேவையில் கடமை புரிந்து ஓய்வு பெற்று செல்லும் இவர் உதவி பதிவாளர் நாயகம், பிரதி பதிவாளர் நாயகமாக கடமை புரிந்து அரச கடமையில் இருந்து ஓய்வு பெற்று செல்வதனை முன்னிட்டு குறித்த பிரியா விடை நிகழ்வு பதிவாளர் பிரிவின் உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு இடம் பெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த பிரதி பதிவாளர் நாயகம் இங்கு கடமை புரியும் உத்தியோகத்தர்கள் பதிவாளர் பரீட்சையில் சித்தி பெற முயற்சி செய்ய வேண்டும் என இதன் போது உத்தியோகத்தர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
திணைக்கள உத்தியோகத்தர்கள் மத்தியில் சிறந்த நிர்வாகியாகவும் சிறந்த ஆளுமை உடையவராகவும் தனது கடமைகளை செவ்வனே செய்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மேலதிக பதிவாளர்கள் பதிவாளர் பிரிவு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



Comments