சிவானந்தா தேசிய பாடசாலையின் பேண்டு வாத்திய மாணவர்களுக்கான சீருடை வழங்கிவைப்பு...........
சிவானந்தா விவேகானந்தா பழைய மாணவர்களும் பேண்டு வாத்திய குழுவில் பங்குகொள்ளும் மாணவர்களின் பெற்றோரின் பங்களிப்புடனும் கடந்த வெள்ளிக்கிழமை (22) சிவானந்தா தேசிய பாடசாலையில் பேண்டு வாத்திய மாணவர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வுக்கு ஆத்மிக அதிதியாக சுவாமி நிலமாதவானந்த ஜீ மஹாராஜ் அவர்களின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது.
உள்நாட்டு, வெளிநாட்டு சிவானந்தா விவேகானந்தா பழைய மாணவர்களின் (1988ம் ஆண்டு க.போ.த.சாதாரண தர பரீட்சை எழுதிய) முயற்சியால் நீண்டகாலமாக இருந்து வந்த சீருடை பிச்சனைக்கான தீர்வு இவர்கள் ஊடாக நிவர்த்திக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு புற நகராகிய கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையின் பேண்டு வாத்திய மாணவர்கள் நீண்ட காலமாக பாடசாலை சீருடையுடன் செயல்பட்டதை கண்ட இப் பழைய மாணவர்கள் உடனடியாக இதற்கான தீர்வை வழங்கிவைத்துள்ளனர். இந்த பழைய மாணவர்கள் குழு இப்பாடசாலைக்கு தொடர்ச்சியாக உதவிவருவது குறிப்பிடத்தக்கது.
பேண்டு வாத்திய கருவிகள் சீருடைகள் வைப்பதற்கு தேவையான ஒரு அறையினை ஒதுக்கி அதற்க்கு நிறப்பூச்சுக்கள் செய்து சீருடையினை பாதுகாப்பாக வைப்பதற்கான இரண்டு அலுமாரிகளையும் பெற்றுக்கொடுத்துள்ளனர்.
இந் நிகழ்விற்கு இவ்வமைப்பின் சிறப்பு பிரதிநிதியாக பிரித்தானியாவில் வசிக்கும் தெட்சனாமூர்த்தி சஞ்சிவன் கலந்து கொண்டு சீருடைகளை மாணவர்களுக்கு வழங்கிவைத்துள்ளார்.
மேலும் இந் நிகழ்விற்கு சிவானந்தா தேசிய பாடசாலையின் அதிபர் எஸ்.தயாபரன், உதவி அதிபர்களான என்.குலேந்திரகுமார், எம்.மணிவண்ணன் மற்றும் பழைய மாணவர் சங்க தலைவர் வி.வாசுதேவன், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் சிவானந்தா விவேகானந்தா பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment