குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி .................

 குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி .................

குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நிகழ்வு (12)ம் திகதி வித்தியாலய அதிபர் த.சிறிதரன் தலைமையில் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பட்டிருப்பு கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் நேசகஜேந்திரன், விசேட அதிதிகளாக கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் இணைச் செயலாளர் மா.தயாபரன், தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் பிராந்திய முகாமையாளர் எந்திரி சா. ஜெயந்தன், ஓய்வு நிலை வைத்திய அதிகாரி வைத்தியர் மேகலா ரவிச்சந்திரன், ஓய்வு நிலை பிரதி கல்வி பணிப்பாளர் வை.தெய்வேந்திரன் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.
மேலும் கௌரவ அதிதிகளாக அதிபர்கள், வளவாளர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், பழைய மாணவர் சங்கத்தினர், ஆலய குருமார்கள், அருட்சகோதர்கள், கல்விமான்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், நடுவர்கள், ஆரம்பிப்பாளர்கள், கிராம பொதுமக்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது முதல் நிகழ்வாக அதிதிகளை மலர்மாலை அணிவித்து, பாண்டு வாத்தியம் முழங்க வரவேற்கப்பட்டு, கொடியேற்றல், மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், ஆசிரியுரை, தலைமையுரை, தேசிய கீதம், பாடசாலை கீதம் இசைக்கப்பட்டு, மாணவர்களின் அணிநடை மரியாதை, ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, விளையாட்டு நிகழ்வுகள் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இவ்வருடம் முதல் இடத்தை சம்பந்தர் இல்லமும், இரண்டாம் இடத்தை சுந்தரர் இல்லமும், மூன்றாம் இடத்தினை அப்பர் இல்லமும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பதங்கள், வெற்றிக்கேடயங்கள், சான்றிதழ்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டதுடன், இல்லத்தலைவர்களுக்கு வெற்றிக்கேடயங்களையும் வழங்கி வைத்துள்ளனர்.
இதன் போது அதிதிகளின் உரை இடம்பெற்றதுடன், குருக்கள்மடம் கிராமத்தை சேர்ந்த மூத்த ஆசிரியர்களுக்கான கௌரவம் இதன் போது பழைய மாணவர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




Comments