விவேகானந்த கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழா............
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் சேவைப் பணிகளின் நூற்றாண்டு விழாவை இனிதே ஆரம்பிக்கவுள்ளமையினை சிறப்பிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முப்பெருவிழாவின் ஆரம்ப நிகழ்வாக விவேகானந்த கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழா (30) திகதி மட்டக்களப்பில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு - புளியந்தீவு வாவிக் கரை வீதியில் அமைந்துள்ள ராமகிருஷ்ண மிஷன் வாளாகத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளார்.
மாணவர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டினை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் இந் நிலையத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் எதிர்காலத்தில் விவேகானந்தா பல்கலைக் கழகமாக தரம் உயர்த்துவதற்கு தாம் முயற்ச்சி செய்வதாக இதன் போது மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராச் தெரிவித்தார்.
Comments
Post a Comment