மன்னார் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் நண்பர் ஐ.அலியார் அரச சேவையிலிருந்து ஓய்வு ..............
மன்னார் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் ஐ.அலியார் தனது 30 வருட அரச சேவையின் பின்னர் இன்று (05) ஓய்வு பெறுகிறார்.
சமுர்த்தி முகாமையாளராக 1994 ல் நியமனம் பெற்ற ஐ.அலியார் அவர்கள் தனது தொடரான விடாமுயற்சி, அற்பணிப்பு என்பவற்றின் காரணமாக அம்பாரை மாவட்ட இணைப்பாளராக, சமுர்த்தி திணைக்கள தலைமைக் காரியாலயத்தில் உதவிப் பணிப்பாளராக, பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வு பெறும் போது பதில் மன்னார் மாவட்டப் பணிப்பளராக கடமையாற்றியமை குறிப்பாடத்தக்கதாகும்.
சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்ட மன்னார் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் ஐ.அலியார் அவர்கள் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் சமுர்த்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும், சமுர்த்தி பயனாளிகளை வலுவூட்டுவதிலும் தனது அளப்பரிய பங்களிப்பினை தலைமைக் காரியாலயத்தில் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றிய காலத்தில் வழங்கியுள்ளமை பாராட்டத் தக்கதாகும்.
தனது சேவைக்காலத்தில் சமுர்த்தி திணைக்களத்தில் ஆளுமையும், ஆற்றலும், திறமையும், கடமையில் அற்பணிப்பும் மிக்க ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டதுடன் சிறந்த பயிற்றுவிப்பாளராகவும், வளவாளராகவும் செயற்பட்டு வடக்கு கிழக்கு மற்றும் மலையக பிரதேசங்களில் பல பயிற்சிப்பட்டறைகளை நடாத்தியுள்ளமை குறிப்பத்தக்கதாகும்.
திணைக்களத்தினால் வெளியிடப்படும் பல சிங்கள மொழி மூல சுற்றறிக்கைகளை தமிழ் மொழி மாற்றம் செய்து வழங்கியமை, வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடமையாற்றும் திணைக்கள அதிகாரிகளுக்கு வேலைகளை இலகுபடுத்துவதற்கு காரணமாக அமைந்ததனை நன்றியோடு பகிர்ந்து கொள்கிறேன்.
Comments
Post a Comment