இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தனினால் பல மில்லியன் பெறுமதியான அபிவிருத்தி திட்டங்கள் அங்குரார்ப்பணம்..............

 இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தனினால் பல மில்லியன் பெறுமதியான அபிவிருத்தி திட்டங்கள் அங்குரார்ப்பணம்..............

கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தனினால் வவுணதீவில் நிர்மானிக்கப்பட்ட பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன அமைச்சின் காலநிலை மாற்றத்தை எதிர் நோக்குவதற்கான பன்முகப்பட்ட நிகழ்ச்சி நிரல் அணுகுமுறை நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக உலக வங்கியின் நிதி அனுசரனையுடன் வவுணதீவு முல்லாமுனை பகுதியில் நிர்மானிக்கப்பட்ட குறித்த பாலமானது (13)ம் திகதி உத்தியோக பூர்வமாக மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
உன்னிச்சை நீர்ப்பாசன வலது கரை வாய்க்கால் இற்கு மேலாக சுமார் 6 மில்லியன் செலவில் குறித்த பாலமானது நிர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு விளம்பர பெயர் பலகையினை திறந்து வைத்ததுடன், பாலத்தினை நாடா வெட்டி திறந்து வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் என்.நாகரெத்தினம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர்கள், விவசாய பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
அதே வேளை றூகம் பிரிவிற்குட்பட்ட உன்னிச்சை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள நாவற்காடு வாய்க்கால் புனருத்தாபன நிகழ்விலும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வாய்க்கால் புனருத்தான நிகழ்வையும் ஆரம்பித்து வைத்துள்ளார்.


Comments