காத்தான்குடி பிரதான வீதியில் பழுதடைந்த மின் விளக்குகள் அகற்றப்பட்டு மீண்டும் புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டன...............

 காத்தான்குடி பிரதான வீதியில் பழுதடைந்த மின் விளக்குகள் அகற்றப்பட்டு மீண்டும் புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டன...............

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதான வீதியில் ஒளிராமல் இருந்த பழுதடைந்த மின் விளக்குகள் அகற்றப்பட்டு மீண்டும் புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.

காத்தான்குடி பிரதான வீதியில் மின் விளக்குகள் ஒளிராமல் இருந்ததால் பிரதான வீதியின் சில இடங்கள் இருட்டடைந்து காணப்பட்டது.

காத்தான்குடி நகர சபை செயலாளர் ரிப்கா ஷபீனின் முயற்சியின் பயனாக காத்தான்குடி நகர சபையினால் பழுதடைந்த மின் விளக்குகளை அகற்றி 63 புதிய மின் வளக்குகள் பொருத்தப்பட்டன.

புனித ரமலான் மாதம் என்பதால் மக்கள் இரவு நேர தொழுகைகளுக்காக பள்ளிவாயலுக்கு செல்பவர்களது பாதுகாப்பாக இத் திட்டம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments