மட்டக்களப்பு சண் தங்கராஜாவுக்கு பிரதி மதுவரி ஆணையாளராக பதவி உயர்வு.....

 மட்டக்களப்பு சண் தங்கராஜாவுக்கு பிரதி மதுவரி ஆணையாளராக பதவி உயர்வு.....

இலங்கை மதுவரித்திணைக்களத்தின் பிரதி மதுவரி ஆணையாளராக பதவி உயர்வு பெற்று தன் திறமையான சேவையின் மூலம் மட்டக்களப்பு மண்ணிற்கு மற்றுமொரு பெருமையை தேடிக் கொடுத்துள்ளார் சண்முகம் தங்கராஜா அவர்கள்.

1991ம் ஆண்டில் மதுவரித்திணைக்களத்தில் மதுவரி பரிசோதகராக தம் முதல் பயணத்தை தொடங்கிய இவர் பல முயற்சிகள், பல தடை தாண்டல் படிப்புக்கள் மற்றும் அர்ப்பணிப்பான சேவைகள் மூலம் பல பதவி உயர்வுகளை பெற்று, தற்போது கிழக்கு மாகாணத்தின் உதவி மதுவரி ஆணையாளராக தம் சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் போது இன்று (21) இலங்கை மதுவரித்திணைக்களத்தின் பிரதி மதுவரி ஆணையாளராக பதவி உயர்வு பெற்று மட்டு மண்ணிற்கு பெருமையை தேடிக் கொடுத்துள்ளார் சண் தங்கராஜா. இன்று (21) பிரதி மதுவரி ஆணையாளராக தன் கடமைகளை கொழும்பில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பெரிய கல்லாற்றை பிறப்பிடமாக கொண்ட இவர் வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்திலும், மட்டக்களப்பு கோட்டைமுனை மகா வித்தியாலத்தின் (இந்துக்கல்லூரி) பழைய மாணவராவார். இவர் தற்போது மட்டக்களப்பை நிரந்தர வசிப்பிடமாக கொண்டு வசித்துவருகின்றார்.

கலையில் ஆர்வமுள்ள இவர் பல திறமைகளை வெளிக்கொணர்வதில் சிறந்தவராவார், இவர் மட்டக்களப்பில் உள்ள பல அமைப்புக்களில் இணைந்து மக்களுக்கான சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


Comments