பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது..........
மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி அதிபர் பி.ஜனகன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை மாணவர்களால் பாண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு அதிதிகள் வரவேற்கப்பட்டனர். தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்லக் கொடிகள் ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் கே.ஹரிகரராஜ் கலந்து கொண்டார்.
போட்டியில் வெற்றியிட்டிய மாணவர்களுக்கும் இல்லங்களுக்கும் வெற்றிக் கிண்ணங்களும் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கப்பட்டது.
சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சிரேஸ்ட விளையாட்டுத்துறை உத்தியோகத்தர் ஈஸ்வரன், வளைகுடா வானம்பாடி சமூக மேம்பாட்டு அமைப்பு தலைவர் கே.கர்ணன், மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக தொழில் வழிகாட்டி ஆலோசகர் ஏ.ஜெகநாதன், நிகழ்வின் அனுசரணையாளரான பாலன் சேவியர், பாடசாலையின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment