வவுணதீவில் நடமாடும் சேவை ..............

 வவுணதீவில் நடமாடும் சேவை ..............

அஸ்வசும நலன் புரி நன்மைகளை பெறவுள்ள பயனாளிகளை மையமாக கொண்டு தேசிய அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளவதற்கான நடமாடும் சேவை முதற் கட்டமாக (12) அன்று ஆயித்தியமலை தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .
இதில் தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்காக 41 பயனாளர்கள் தமக்கான சேவையினை பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஆயித்தியமலை சதா சகாய மாதா திருத்தல வளாகத்தில் இடம் பெற்ற குறித்த நடமாடும் சேவையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Comments