ஏறாவூரில், அரச உத்தியோகத்தர்களுக்கான சிங்கள மொழிப் பயிற்சி வகுப்பு ஆரம்பம்...........

 ஏறாவூரில், அரச உத்தியோகத்தர்களுக்கான சிங்கள மொழிப் பயிற்சி வகுப்பு ஆரம்பம்...........

அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 150 மணித்தியாலங்களை கொண்ட 25 நாள் சிங்கள பயிற்சி வகுப்புக்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு ஏறாவூர் அறபா வித்தியால பிரதான மன்டபத்தில்நடைபெற்றது.

ஏறாவூர் சுப்ரின் லயன்ஸ் கழகத்தின் அனுசரனையுடன் அதன் தலைவர் ஏ.ஆர்.ஆசிக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஏறாவூர் பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சறூக், ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஐ.எம்.தஸ்லீம் மற்றும் அரச கரும மொழிகள் திணைக்களத்தின் போதனாசிரியர் எம்.எஸ்.செய்னுதீன் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இப்பயிற்சி வகுப்பினை தொடர்வதற்கான கற்றல் உபகரணங்கள் ஏறாவூர் சுப்ரின் லயன்ஸ் கழகத்தினால் வழங்கப்பட்டது.

பயிற்சி வகுப்பு மூலம் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் சிங்கள மொழி ஆற்றலை விருத்தி செய்து கொள்வதுடன் தங்களது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளையும் தமது அலுவலக கடமைகளையும் இலகுபடுத்திக் கொள்ள வழிவகுக்கின்றது.

தேசிய இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், சிங்கள மொழி மூலம் வேலைகளை திறம்பட மேற்கொள்ளவும் அணைத்து மக்களுக்குமான அரச சேவையினை வழங்க வேண்டும் எனும் நோக்கத்துடன் இப்பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Comments