புனித மிக்கேல் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி...........
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி கல்லூரியின் அதிபர் அன்ரன் பெனடிக் யோசப் தலைமையில் வெபர் மைதானத்தில் சிறப்பாக இடம் பெற்றது.
பாடசாலை மாணவர்களின் பாணட் வாத்தியம் முழங்க தேசிய கொடி மற்றும் பாடசாலைக் கீதம் இசைத்து விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பேராயர் யோசப் பொன்னையா ஆண்டகை கலந்து சிறப்பித்ததுடன், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டார்.
நிகழ்வில் அதிதிகளுக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் விளையாட்டு போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் இல்லங்களுக்கும் வெற்றிக் கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
விசேட அதிதியாக பிரதி கல்வி பணிப்பாளர் சி.சுபாகரன் மற்றும் 243 இராணுவ படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சன்டிம குமாரசிங்க கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினராக உடற்கல்வி பிரதி பணிப்பாளர் வி.லவக்குமார், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றார்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தி, விளையாட்டுத்துறையின் மூலம் சிறந்த பிரஜைகளை உருவாக்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment