மட்டக்களப்பில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய திட்டம்- வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்............

 மட்டக்களப்பில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய திட்டம்- வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்............

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரிவுக்குட்பட்ட உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் உணவு விடுதிகளில் உணவுகள் கையாளும் போது நுகர்வோருக்கு ஏற்படும் திருப்தி மற்றும் அதிருப்தியை தெரியப்படுத்தும் வகையில், புதிய வட்ஸ் அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உணவகங்களின் உணவின் தரம், கையாலுகையில் திருப்தியா, அதிருப்தியா போன்ற விடயங்களை 070 57 11 15 1 என்ற வட்ஸப் இலக்கம் ஊடாகத் தெரிவிக்க முடியும். வழங்கப்படும் தகவல்களின் அடிப்படையில் துரித நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் தலைமையில் நடைபெற்ற, புதிய வட்ஸப் இலக்கம் அறிமுகப்படுத்தும் நிகழ்வில், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட, உணவகங்கள்இபேக்கரிகள், உணவு விடுதிகளின் உரிமையாளர்கள்இ சுகாதார பரிசோதகர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை வைத்தியர்கள் கலந்து கொண்டனர். அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸப் இலக்கம், உணவகங்களிலும் ஸ்ரிக்கர்களாக ஒட்டப்பட்டன.










Comments