கல்வி அமைச்சின் முன்னோடி விசேட தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம்.............
கல்வி அமைச்சின் முன்னோடி விசேட தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம்.............
கல்வி அமைச்சின் முன்னோடி விசேட தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான மூன்று மாத கால தொழில் வழிகாட்டல் பயிற்சி நெறி திறன் அபிவிருத்தி திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் 299 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அதற்கான வேலைத்திட்டம் (05) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 பாடசாலைகள் தெரிவு செய்யப் பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான ஆரம்ப நிகழ்வு வின்சன்ட் மகளீர் உயர்தர தேசிய பாடசாலையில் மாவட்ட திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.சிவகுமார் தலைமையில் (05) திகதி இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டு கல்வி அமைச்சின் குறித்த முன்னோடி விசேட தொழில் வழிகாட்டல் வேலைத்திட்டம் தொடர்பாக தெளிவூட்டல்களை வழங்கினார்.
Comments
Post a Comment