மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் மகளிர் தினத்தையொட்டியதான நிகழ்வுகள்.............

 மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் மகளிர் தினத்தையொட்டியதான நிகழ்வுகள்.............

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் 'அவளுடைய பலம் - நாட்டிற்கு முன்னேற்றம்' எனும் தொனிப்பொருளில் 2024ம் ஆண்டுக்கான  மகளிர் தினத்தினை மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்யப்பட்டு மிகச்சிறப்பாக ஆரம்ப நிகழ்வை  பிரதேச செயலாளர்  சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் எண்ணக்கரு மற்றும் வழிகாட்டுதலின் கீழ்  04ம் திகதி நடைபெற்றது. 

முதலாம் நிகழ்வாக கலைகள் மற்றும் அரங்க விளையாட்டுகளின் மூலமாக  'மகளிர் மனவெழுச்சி ஆற்றுப்படுத்துகை'   நிகழ்வானது பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றதுடன், இறுதி நாளான (05)ம் திகதி இந்நிகழ்வில்  கலந்து கொண்ட மகளிர் சங்க உறுப்பினர்களின் கலைநிகழ்வுகளுடன் இனிதே நிறைவுற்றது.

இந் நிகழ்வில் பிரதேச செயலக பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 45 மகளிர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது மகளிருக்கான கலந்துரையாடல் இடம்பெற்றது,  இன் நிகழ்வின் வளவாளர்களாக ம. நிரோஷினிதேவி, கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.சிந்துஉஷா மற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்  ப. ராஜதிலகன் ஆகியோர் கலந்து கொண்டடனர்.












Comments