கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக வருடாந்த ஒன்றுகூடலும் கௌரவிப்பு நிகழ்வும்.............
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு (28) திகதி பிரதேச செயலாளரும் நலன்புரி சங்கத்தலைவருமான எஸ்.எம்.முசம்மில் தலைமையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.றமீஸா, கணக்காளர் ஏ.மோகனகுமார், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.ருவைத், நிருவாக உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.தாஹிர், சமுர்த்தி தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.பஷீர், நலன்புரி நிருவாக உறுப்பினர்கள், ஏனைய அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பிரதேச செயலாளரின் தலைமையுரையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வானது ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களுக்கும், வேறு பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களுக்கும், கௌரவிப்பும், பணப்பரிசில்களும், நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நலன்புரிச் சங்க உறுப்பினர்களினால் பாடல், கவிதை, நாடகம், நகைச்சுவைகள் போன்ற பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment