மட்டு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக ராஜ்பாபு தன் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்....
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய சமுர்த்தி பணிப்பாளராக சுந்தரமூர்த்தி ராஜ்பாபு அவர்கள் 01.04.2024 அன்று தன் கடமைகளை பொறுப்பெற்றுக் கொண்டார்.
(01) ஆகிய இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தன் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டதுடன், தன் அலுவக பணியையும் சமுர்த்தி பிரிவில் தொடங்கினார்.
கொம்மாதுறையை பிறப்பிடமாக கொண்ட இவர், கோரளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடமையாற்றி, தற்போது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
Comments
Post a Comment