வெல்லாவெளியில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்த யானைகளால், பதற்றம் ஏற்பட்டது........
மட்டக்களப்பு வெல்லாவெளிப் பகுதியில் மாலை உட்புகுந்த காட்டு யானைகளால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலமை ஏற்பட்டது.
5 காட்டு யானைகள் வெல்லாவெளிப் பகுதிக்கு படையெடுத்து வந்துள்ளன. இதனால் கால போக வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் அச்சமடைந்தனர்.
வெல்லாவெளியில் அமைந்துள்ள வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், அப் பகுதிக்கு விரைந்த அதிகாரிகள் யானை வெடிகளை கொழுத்தி அப்பகுதியில் அமைந்துள்ள தளவாய் காட்டுப்பகுதிக்குள் யானைக் கூட்டத்தை துரத்தினர்.
வெல்லாவெளியில் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் அச்சுறுத்தல் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment