ஏறாவூர் பற்று, செங்கலடி பிரதேச மட்ட சிறுவர் சபையின் முதலாம் காலாண்டுக் கூட்டம்...........
ஏறாவூர் பற்று, செங்கலடி பிரதேச மட்ட சிறுவர் சபையின் 2024 ஆண்டிற்கான முதலாம் காலாண்டுக் கூட்டம் உதவி பிரதேச செயலாளர் நிருபா பிருந்தன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன் போது வீதி விபத்துகளில் இருந்து சிறுவர்களை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வு ஏறாவூர் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம்.றுசைட் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிறுவர் கழக செயற்பாடுகளில் பிரதேச மட்ட சிறுவர் சபை உறுப்பினர்களின் பங்கு மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டதுடன், 2024 - 2026 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிறுவர் கழக உறுப்பினர்கள் மற்றும் சிறுவர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment