மட்டக்களப்பில் லியோ கழகத்தின் மகளிர் தின நிகழ்வு............
மட்டக்களப்பு லியோ கழகத்தின் அவள் தனித்துவமானவள் எனும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வு மட்டக்களப்பு லியோ கழக தலைவர் எஸ்.ஹரிஸ் தலைமையில் பாடுமீன் பூங்காவில் (17)ம் திகதி இடம் பெற்றது.
மட்டக்களப்பு லேடி லயன்ஸ் கழகம் மற்றும் லியோ கழகத்தின் ஏற்பாட்டில் காந்தி பூங்காவில் இருந்து பாடுமீன் பூங்கா வரை மகளிர் தினத்திற்கான நடைபவணியில் பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் புனித சிசிலியா தேசிய பாடசாலை மாணவி ரவிக்குமார் ஷயனாவினால் அவள் தனித்துவமானவல் எனும் தொனிப் பொருளில் இந் நிகழ்வில் ஓவியம் வரைந்து அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
லியோ கழக உறுப்பினர்களினால் மாதரைப் போற்றி கண்கவர் நடனங்கள், பாடல்கள் இசைக்கப்பட்டதுடன் சாதனை படைத்தவர்களுக்கான விருதுகள் இதன் போது அதிதிகளினால் வழங்கப்பட்டது.
மட்டக்களப்பில் லியோ கழகத்தினரினால் பல சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Comments
Post a Comment