செங்கலடியில் மகளீர் தின நிகழ்வு ................

 செங்கலடியில் மகளீர் தின நிகழ்வு ................

மட்டக்களப்பு, ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை நூலகங்கள் மற்றும் சனசமூகநிலையங்களின் சம்மேளனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த மகளீர் தின நிகழ்வு செங்கலடியில் இடம்பெற்றது.

செங்கலடி பிரதேச சபையின் செயலாளர் வ.பற்குணன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அதிதிகளாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சி.பிரகாஸ், ஆகியோருடன் சிறந்த பெண் முயற்சியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

'சாதனைகளோடு சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட கற்பவிருட்சங்கள்' எனும் தொணிப்பொருளினாலான நடை பவனியானது செங்கலடி பிரதான வீதி ஆரம்பித்து செங்கலடி பொதுச் சந்தை வரை சென்றது.

பெண்களுக்கான உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் தொழிற்சந்தையும் இதன் போது அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டது. சிறந்த சாதனைப் பெண்கள் பெண் முயற்சியாளர்கள் உள்ளிட்டோர் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டதுடன்இ அதிதிகளும் கௌரவிக்கப்பட்டார்.


Comments