அஸ்வெசும குடும்பங்களில் உள்ள இளைஞர்களுக்கான தொழில் மற்றும் திறன் விருத்திக்கான கலந்துரையாடல்......
அஸ்வெசும குடும்பங்களில் உள்ள இளைஞர்களுக்கான தொழில் மற்றும் திறன் விருத்திகளை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் (04)ம் திகதி இடம்பெற்றது.
இதன் போது மாவட்ட செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம், அம்கோ நிறுவனம் மற்றும் பிரண்டினா நிறுவனத்தினர் கலந்து கொண்டு கலந்துரையாடி இருந்தனர்.
இதன் போது மிக வறுமையான மற்றும் வறுமையான குடும்பங்களில் அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்பட்ட குடும்பங்களில் உள்ள இளைஞர்கள் யுவதிகளுக்கான தொழிலை விருத்தி செய்வதற்கான திறன்களை மேலோங்க செய்வதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்துடன் இனைந்து செயற்படுவதற்காக அம்கோ நிறுவனம் மற்றும் பிரண்டினா நிறுவனங்கள் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்குவதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றன.
இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பிரதி பணிப்பாளர் வி.நவநீதன், மாவட்ட சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளர் J.F.மனோகிதராஜ், சிரேஸ்ட சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் A.M.அலிஅக்பர், அம்கோ நிறுவனத்தின் சார்பாக V.சிவயோகராஜன் பிரண்டினா நிறுவனத்தின் சார்பாக S.டினேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment