களுவாஞ்சிக்குடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்..............

 களுவாஞ்சிக்குடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்..............

 மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர், நண்பரொருவரின் பிறந்த தினத்திற்குச் சென்று  வீடு திரும்பிக் கொண்டிருந்த போது  மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து  வீதியோரமிருந்த மரத்தில் மோதி விபத்துச் சம்பவித்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்த நிலையில்  இருவரும் படுகாயங்களுடன் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட வேளை, ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எருவில் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே உயிரிழந்த நிலையில், மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments